
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 28.87 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.87 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.