உத்தரகாண்ட் முக்வா தேவி கோவிலில் பிரதமர் மோடி 'கங்கா ஆரத்தி' எடுத்து வழிபாடு

3 hours ago 1

புதுடெல்லி:

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் டேராடூன் சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி வரவேற்றார்.

அங்கிருந்து உத்தரகாசியில் உள்ள முக்வா தேவி கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஆரத்தி எடுத்து கங்கா தேவியை வழிபட்டார். பின்னர் ஹர்சில் பள்ளத்தாக்குக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சைக்கிள் மற்றும் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிட்டார்.

உத்தரகாசியில் உள்ள முக்வா தேவி கோவில், கங்கா தேவியின் குளிர்கால வாசஸ்தலமாகும். குளிர்காலத்திற்காக கங்கோத்ரி கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர், கங்கா தேவியின் சிலை முக்வா தேவி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு இந்த ஆண்டு குளிர்கால சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மத சுற்றுலாவை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தங்கும் விடுதிகள் உட்பட பல உள்ளூர் வணிகங்களும் செழிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று பிரதமர் கூறி கூறி உள்ளார்.

Read Entire Article