உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி; 7 பேர் மாயம்

1 week ago 2

டேராடூன்,

உத்தரகாண்டின் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சிலாய் பந்த் பகுதியில் ஓட்டல் ஒன்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில், 19 முதல் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக, தொழிலாளர்கள் தங்க வசதியாக முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் இன்று காலை 6 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முகாமில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். எனினும், அதிர்ஷ்டவசத்தில் அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். 9 பேரை காணவில்லை. நெடுஞ்சாலையில் 10 முதல் 12 மீட்டர் நீளமுள்ள பகுதி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரகாண்டில் 24 மணிநேர சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு சர் தம் யாத்திரை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read Entire Article