உத்தர பிரதேசம்: தண்ணீர் லாரியுடன் பேருந்து மோதி விபத்து - 8 பேர் பலி

6 months ago 23

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் சக்ரவா பகுதியில் உள்ள ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் செய்வதற்காக தண்ணீர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லக்னோ-டெல்லி பேருந்து எதிர்பாராத விதமாக தண்ணிர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 பயணிகள் உயிரிழந்ததாகவும், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற மாநில நீர்வளத்துறை மந்திரி ஸ்வந்தரா தேவ் சிங், தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தார் என்று பயணிகள் கூறுவதாக தெரிவித்தார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article