உத்தர பிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

5 months ago 23

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியில், மீரட் சிட்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை 9 மணியளவில் சரக்கு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இது குறித்து மொராதாபாத் ரெயில்வே கண்காணிப்பாளர் அஷுடோஷ் சுக்லா கூறுகையில், சரக்கு ரெயிலை நிறுத்தும்போது எதிர்பாராத விதமாக ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Read Entire Article