‘‘தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’’ - அண்ணாமலை குற்றச்சாட்டு

3 hours ago 2

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் 22 அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, அந்தப் பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும், திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர், கடந்த 20 நாட்களாக, காவல்துறையில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்.

Read Entire Article