கோவை,
கோவையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது குறித்து இதயத்தை பலப்படுத்தி விட்டு வந்த பின் வாழ்த்து கூறுகிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்ற ஒரு காரணத்தை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?. உதயநிதியின் பணியை வைத்து மக்களே முடிவு செய்வார்கள். ஜாமீன் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி நேர்மையான அரசை கொடுக்க முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.