உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு இனிப்பு வழங்கிய திமுகவினர்

3 months ago 23

திருமங்கலம், செப். 30: திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார். இது திமுகவினருக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருமங்கலம் நகர கழகம் சார்பில் நேற்று நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து ‘கேக்’ வெட்டினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத் சேட், நகர நிர்வாகிகள் செல்வம், சின்னசாமி, கோல்டன் தங்கபாண்டி, நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, ரம்ஜான் பேகம் ஜாகீர், வினோத், சங்கீதா முருகன், செல்வம், மங்கள கெளரி, நகர இளைஞரணி ஹரி, ராஜ்குமார், ஆதி, ஜெயபால், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கவிஸ்ரீ, முன்னாள் கவுன்சிலர்கள் மதுரபாண்டி, வள்ளிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு இனிப்பு வழங்கிய திமுகவினர் appeared first on Dinakaran.

Read Entire Article