சென்னை: உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் சிறப்பாக செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் பேசியதால் அவையில் இன்று சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம், சீர்காழி தொகுதி, கொள்ளிடம் வடிகால் ஆற்றின் வலது கரையின் சாலையை சீரமைப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மூத்த அமைச்சர் துரைமுருகன், மு.கருணாநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்பட்டார். இப்போது தலைவர் ஸ்டாலின் தலைமையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏன், உதயநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்படுவார்” என பேசினார்.