
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகைக்கு கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று உதகையில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென மரம் முறிந்து விழுந்ததில் அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயதான ஆதிதேவ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.