உதகை: உதகை நகராட்சியுடன் கேத்தி பேரூராட்சியை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கேத்தி உட்பட 68 கிராம தலைவர்களுடன் மக்கள் கேத்தியில் ஆலோசனை நடத்தினர்.
இந்த அலோசனைக்கூட்டத்துக்கு கேத்தி 14 ஊர் தலைவர் சி.கே.என். ரமேஷ் தலைமை வகித்தார். கேத்தி ஊர் தலைவர் சங்கர் மற்றும் 68 கிராம தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இதில், கேத்தி பேரூராட்சியை, உதகை நகராட்சியுடன் இணைத்து, உதகை மாநகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து ஊர் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்து கேத்தி பேரூராட்சியை பேரூராட்சியாகவே தொடர முடிவு செய்யப்பட்டது.