மதுரை: தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில், மதுரை விநாயகா நகர் டாக்டர் தங்கராஜ் சாலையில் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவ, மாணவிகளுக்காக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தங்கும் வசதி, உணவு, சீருடை, மருத்துவம், பாடப் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் பள்ளியை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 77080 64983, 99523 81488 என்ற செல்போன் எண்களிலும் தகவல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உண்டு உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.