உணவே மருந்து

2 months ago 13

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்டிக் கொண்டிருக்கிறது. மன அழுத்தத்தின் போது உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உணவும் மன அழுத்தத்தை கூடுதலாக தூண்டி பாதிப்பை அதிகரிக்க செய்து விடும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட் கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் துத்தநாகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகி விடும். முந்திரிப் பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறைபாட்டோடு சேர்த்து மன அழுத்தத்தையும் கவலையும் குறைக்க உதவும்.

மெக்னீசியமும் மன நிலையை மேம் படுத்துவதற்கு வழி வகை செய்யும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது. இவை மனநிலை முன்னேற்றத்துக்கும் வித்திடும். அவகாடோவிலும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் சேர்மங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மன அழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.கீரைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன், மத்தி போன்ற மீன்வகைகளையும் உட்கொள்ளவும். அதில் இருக்கும் வைட்டமின் டி பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளை தணிக்கும்.இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. பாலில் இருக்கும் டிரிப்டோபன் மெலபோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் மன அழுத்தத்தைக் குறைந்து தூக்கத்தை தூண்டி விடும்.நார்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் உட்கொள்வது மிக அவசியம். குறிப்பாக தண்ணீரை விட மிகப்பெரிய மருந்து எதுவும் இல்லை. நிறைய தண்ணீர் எடுத்துக்கொள்வதும் அவசியம்.
– அ.ப. ஜெயபால்

The post உணவே மருந்து appeared first on Dinakaran.

Read Entire Article