பணியிடங்கள் விவரம்:
1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 11 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 28க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 7 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 28க்குள். தகுதி: உணவு அறிவியல்/உணவு ெதாழில்நுட்பம்/ நுண்ணுயிரியல்/வேதியியல் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.500 மட்டும். இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 10.05.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் மென்டல் ஏபிலிட்டி, பொது அறிவு, ஆங்கில மொழி திறன் மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.www.cftri.res.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2025.
The post உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை : பிஎஸ்சி/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.