உடுமலை ருத்ரப்ப நகரில் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் பீடத்தில் அமர்ந்த கிளி

18 hours ago 2

உடுமலை: உடுமலை ருத்ரப்ப நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனமர் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் ஸ்ரீரேணுகாதேவி அம்மன், ஸ்ரீகுழந்தை வேலாயுத சுப்ரமண்யர், ஆஞ்சநேயர், கால பைரவர் மற்றும் நவக்கிரக சந்நதிகள் உள்ளன. பங்குனி உத்திர நாளான வரும் 11ம் தேதி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க வேலைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று பூஜையின் போது கிளி ஒன்று பறந்து வந்து ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் பீடத்தில் அமர்ந்து அனைவருக்கும் காட்சி கொடுத்தது. புதன்கிழமையான நேற்று ஸ்ரீமீனாட்சி அம்பிகையே இறைவன் மடியில் வந்தமர்ந்து, காட்சியளித்ததாக பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து சென்றனர்.

The post உடுமலை ருத்ரப்ப நகரில் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் பீடத்தில் அமர்ந்த கிளி appeared first on Dinakaran.

Read Entire Article