உடுமலை அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கி 2 பேர் கைது

5 hours ago 3

 

உடுமலை,மே25: உடுமலை அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை கொங்கல்நகரத்தை சேர்ந்தவர் ஜவகர்(39). இவர் குடிமங்கலம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பொன்னேரி சுண்டக்கம்பாளையம் பிரிவில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு பொன்னேரியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்புசாமி (28), சதீஷ்குமார்(31) ஆகியோர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதை தலைமைக்காவலர் ஜவகர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தகாத வார்த்தைகளால் திட்டி, தலைமைக் காவலர் ஜவகரை கீழே தள்ளி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த ஜவகர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி குடிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், உதவி ஆய்வாளர் அசோக்குமார் வழக்கு பதிந்து, தலைமைக்காவலரை தாக்கிய கருப்புசாமி, ஜவகர் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post உடுமலை அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கி 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article