உடான் திட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

3 weeks ago 10

புதுடெல்லி: விமான போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்கள் இயக்குவதை நோக்கமாக கொண்டு பிராந்திய இணைப்பு திட்டமான உடான் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தொடங்கப்பட்டது.  இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவையொட்டி டெல்லியில் நேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கலந்து கொண்டு பேசுகையில், உடான் திட்டத்தின் கீழ்601 வழித்தடங்கள் மற்றும் 71 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் ” என்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் விமான போக்குவரத்து துறை அமைச்aகம் வெளியிட்ட அறிக்கையில்,” நாட்டில் செயல்படுத்தப்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டு 74 ஆக இருந்தது. இது 2024ம் ஆண்டு 157 என இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2047ம் ஆண்டிற்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 300-400 என அதிகரிக்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

The post உடான் திட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article