சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பசுமைகுமார் மரத்திலிருந்து விழுந்து மூளைச்சாவு அடைந்து விட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்திருக்கிறார்கள். குடும்பத் தலைவரின் இழப்பையும் தாங்கிக் கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 8 பேரின் உயிர்களை காப்பாற்றியிருப்பது பாராட்டத்தக்கது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோதுதான், தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அதன் பயனாக உடல் உறுப்பு தானம் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பது மனநிறைவு அளிக்கிறது.
The post உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு அன்புமணி பாராட்டு appeared first on Dinakaran.