சென்னை: அம்பத்தூரில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூர் புதூர் திருத்தணி நகர், 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (53). இவர் கடந்த 19ம் தேதி வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி 20ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த வெங்கடகிருஷ்ணன் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் வெங்கடகிருஷ்ணனின் சிறுநீரகங்கள் தானமாக அளிக்கப்பட்டன. தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உடல் உறுப்பு தானம் செய்த வெங்கடகிருஷ்ணனின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலர் சதீஷ்குமார், அம்பத்தூர் வட்டாட்சியர் மணவாளன், காவல் துறையினர் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை appeared first on Dinakaran.