உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம்

4 months ago 24

 

சிவகங்கை, அக்.7:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழக அரசின் முதல்வரின் கனவு திட்டமான, நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டதின் படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.

இதில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை, லயன்ஸ் கிளப், நடைப்பயிற்சியாளர்கள் இணைந்து கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் வளாகத்தை சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் 10,000 அடி நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

The post உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article