உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

1 week ago 5

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியின் எதிரொலியாக, தமிழக அரசு மனுவை வாபஸ் பெற்றது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.

Read Entire Article