புதுடெல்லி: ஏ.சி.ஆர் என்ற தனியார் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி சிப் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர் ஆகிய கருவிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததற்குப் பிறகு அதில் உள்ள தரவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பது குறித்து புதிய கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவில், தற்போதைக்கு எந்த ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்தும் எந்த ஒரு தரவுகளையும் அகற்ற வேண்டாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அந்த தரவுகளை அகற்றுவதில் எத்தகைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
The post உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த ஒரு தரவையும் அழிக்க கூடாது appeared first on Dinakaran.