டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பிரிவுபசார விழாவில் பேசிய சஞ்சீவ் கண்ணா, ‘ஓய்வுக்கு பிறகு வேறு எந்த பதவியையும் ஏற்கப்போவது இல்லை. சட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவேன்’ என்றார்.
சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமித்து ஜனாதிபதி முர்மு ஏப்.29ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியற்றார்.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் குடும்பத்தினர் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
தற்போது பதவியேற்ற பி.ஆர். கவாய் இந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய், புத்த மதத்தை சேர்ந்தவர் ஆவார். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு(2007-2010) பிறகு இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியில் அமரும் 2வது தலித் நீதிபதி ஆவார்.
The post உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்! appeared first on Dinakaran.