
சென்னை,
உலகம் முழுவதும் தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார்.
அந்தவகையில் நேற்று மும்பையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனுஷும் கலந்துகொண்டிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 'ராயன்' படத்தில் வரும் 'உசுரே நீதானே...' பாடலை தனுஷ் பாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது தனுஷ் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.