உங்கள் வரவு பெரிய நம்பிக்கையாக அமையட்டும்: விஜய்க்கு நடிகர் சசிகுமார் வாழ்த்து

2 months ago 13

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறிய நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சசிகுமார் வாழ்த்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடுள்ள செய்தியில், "உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்…விஜய் சார் " என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article