"உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது..?" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

3 hours ago 3

புதுடெல்லி,

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பிரதமர் மோடியின் உரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மோடி ஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள்.

எனக்கு பதில் சொல்லுங்கள்:

1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்?

2. டிரம்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?

3. கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது?

நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


मोदी जी, खोखले भाषण देना बंद कीजिए।

सिर्फ इतना बताइए:
1. आतंकवाद पर आपने पाकिस्तान की बात पर भरोसा क्यों किया?
2. ट्रंप के सामने झुककर आपने भारत के हितों की कुर्बानी क्यों दी?
3. आपका ख़ून सिर्फ़ कैमरों के सामने ही क्यों गरम होता है?

आपने भारत के सम्मान से समझौता कर लिया! pic.twitter.com/HhjqbjDsaB

— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2025


Read Entire Article