எம்எல்ஏ மாங்குடி, மேயர் முத்துத்துரை துவக்கினர்
காரைக்குடி, மே 28: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலை பணிகள் துவக்க விழா நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் பூமிநாதன் வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் முத்துத்துரை ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். துணை மேயர் நா.குணசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கொப்புடையநாயகி அம்மன் கோயில் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் கடைகளுக்கு உள்ளே புகுந்து விடுகிறது என மக்கள் புகார் அளித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட இப்பகுதியில் உரிய மழைநீர் வடிகாலுடன் கூடிய வகையில் சாலை அமைத்து தர வேண்டும் என உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். இக்கோரிக்கையை ஏற்று சாலை மற்றும் வடிகால் அமைக்க ரூ.2 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்கள். இதற்கு தொகுதி மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
The post உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை பணி appeared first on Dinakaran.