சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் கே.ராஜூ (அதிமுக), “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இன்டர்வென்ஷனல் இருதய சிகிச்சை நிபுணரை நியமிக்க அரசு ஆவன செய்யுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு நம்முடைய முதல்வர், 7 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கேத் லேப் கருவியும், 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் ஒரு நெஞ்சக மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார்.
இருதய சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, மிகச் சிறப்பான வகையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்றார். தொடர்ந்து செல்லூர் கே. ராஜூ பேசுகையில், “குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதுபோன்று, கேள்வி கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் அதற்கான பதில் வந்திருக்கிறது என்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு, இதயம் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் இதயம் ஸ்ட்ராங்காக இருக்கிறது” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post உங்கள் இதயம் ஸ்ட்ராங்… பேரவைத்தலைவர் பேச்சால் அவையில் சிரிப்பலை appeared first on Dinakaran.