
சென்னை,
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சனை இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தி, முழு நாட்டையும் பெருமைப்படுத்திய குகேஷுக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்குப் பிறகு உங்கள் அமைதி மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் அது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.