உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: புதுக்கோட்டை ஒன்றியப்பகுதிகளில் கலெக்டர் களஆய்வு

2 weeks ago 2

புதுக்கோட்டை, ஜன. 24: புதுக்கோட்டை மாவட்டம்ஃ ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி பகுதிகளில், பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர்.அருணா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், கிராமப்புறங்களில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீர்வசதிகளை மேம்படுத்துதல், மாணாக்கர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்றையதினம், 9ஏ நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி பகுதிகளில், பல்வேறு துறை சார்ந்த பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி, அடப்பன்காரசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்தும், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், அடப்பன்காரசத்திரம் செல்லுகுடி நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்தும், செய்தியாளர்கள் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி).அப்தாப் ரசூல், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்.ஐஸ்வர்யா, புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்.இந்திராகாந்தி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: புதுக்கோட்டை ஒன்றியப்பகுதிகளில் கலெக்டர் களஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article