
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் - நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன!.
பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.