சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.