தர்மபுரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தர்மபுரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வரும் 20ம்தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post சமூக நல்லிணக்க ஊராட்சி விருது appeared first on Dinakaran.