உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு நடத்தத் தயார் - ரஷ்ய அதிபர் புதின்

2 months ago 10
உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். சோச்சி நகரில் வால்டாய் கிளப் நடத்திய உரையாடலில் புதின் கலந்து கொண்டு பேசுகையில், உக்ரைன் நடுநிலை வகிக்காவிட்டால், அதனை பிற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்துவர் என்றும், உக்ரைனை ஒட்டிய ரஷ்யாவின் எல்லையை அப்பகுதி மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். ஐரோப்பிய நாடுகள் சுமூகமான நம்பகத்தன்மையான நிலைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்த புதின், மத்திய ஆசியாவில் சீனாவின் நிலையான கொள்கை ரஷ்யாவுக்கு உதவிகரமாக உள்ளதாகக் கூறினார்.
Read Entire Article