வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒத்துழைக்காவிடில் அந்நாட்டு கச்சா எண்ணெய் மீது அதிகமாக 25% வரி என டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தன் திட்டத்துக்கு ஒத்துழைக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது தான் கோபத்தில் உள்ளதாக டிரம்ப் பேட்டியளித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் நம்பகத்தன்மையை புதின் சந்தேகிப்பதாக குறைகூறியுள்ளார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனில் புதிய தலைமை ஆட்சிக்கு வரவேண்டும் என்று புதின் கூறுவதற்கும் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒத்துழைக்காவிடில் அந்நாட்டு கச்சா எண்ணெய் மீது அதிகவரி: டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.