ரோம்: உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக போப் லியோ மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். கடந்த 8ம் தேதி புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து உக்ரைனில் அமைதியை கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். நேற்று முன்தினம் பதவியேற்ற போப் லியோ தனது உரையின்போது நீடித்த அமைதியான பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் உக்ரைன் குறித்து குறிப்பிட்டு இருந்தார். அமெரிக்காவும் உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நிறுத்தத்துக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் போப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் நேற்று புதிய போப் லியோவை நேரில் சந்தித்து பேசினார்.முன்னதாக வாடிகனில் ஞாயிறு பிரார்த்தனைக்கு பின் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெல் லேயன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
The post உக்ரைன் போரை நிறுத்த முயற்சி போப் லியோ -அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு appeared first on Dinakaran.