மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது உக்ரைன் 2ம் நாளாக நேற்றும் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் இந்த தாக்குதல் காரணமாக இருநாடுகளின் எல்லைகள், ரஷ்யாவின் மத்திய பகுதிகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள 4 விமான நிலையங்கள் மூடப்பட்டு, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
The post உக்ரைன் டிரோன் தாக்குதல் மாஸ்கோவில் 4 விமான நிலையங்கள் மூடல் appeared first on Dinakaran.