உக்ரைன் உடனான போரை 50 நாட்களில் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

5 hours ago 4

வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை 50 நாட்களில் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் சர்வதேச அளவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறார். மத்தியக் கிழக்கில் இஸ்ரேலை சுற்றி நிலவிய பதற்றத்தைத் தணிக்கக் கூட அவர் பெரியளவில் முயற்சி செய்தார். கடந்த மாதம் இஸ்ரேல் ஈரான் இடையே போர் வெடித்த போதும் கூட அதை முடிவுக்குக் கொண்டு வர முயன்றதாக டிரம்ப் கூறியிருந்தார்.

அதேநேரம் ரஷ்யா உக்ரைன் மோதலைப் பல காலமாக முடிவுக்குக் கொண்டு வர அவர் முயன்று வருகிறார். ஆனாலும், புதின் இந்த விவகாரத்தில் பிடி கொடுக்க மறுத்தே வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பித்த ரஷ்யா உக்ரைன் மோதல் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா உடன்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது; புதினின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது.அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். நாங்கள் 2ம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம். எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் வரி 100 சதவீதம் விதிக்கப்படும் என்றார்.

The post உக்ரைன் உடனான போரை 50 நாட்களில் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article