உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வடகொரியா 10 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு பகுதியினர் ஏற்கனவே போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் எல்லையில் வடகொரியப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டி, சட்டவிரோதமான போரில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதாக விமர்சித்தார். இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.