உகினியம் மலை கிராமத்தில் விவசாய நிலத்திற்குள் முகாமிட்டுள்ள காட்டு யானை

1 week ago 2

 

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு மற்றும் பகல் நேரங்களில் வனத்திலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் விளைவித்துள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தாக்குவது தொடர் கதையாக உள்ளது.

இதற்கிடையே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உகினியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கடந்த சில நாட்களாக சாலையோர பகுதிகளிலும், விவசாய விளை நிலத்திலும் நடமாடுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையின் இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி மக்காச்சோள பயிருக்கு காவல் இருந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பகல் நேரத்தில் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உகினியம் மலை கிராமத்தில் விவசாய நிலத்திற்குள் முகாமிட்டுள்ள காட்டு யானை appeared first on Dinakaran.

Read Entire Article