டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி 5,000 அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5,000 அரசுப் பள்ளிகளை மூடும் பாஜக அரசின் நடவடிக்கை பரவலான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட உ.பி. பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைப்பதே அரசின் திட்டம் ஆகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், சுமார் 29,000 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை உறுதி செய்வதில் உ.பி. பாஜக அரசு படு தோல்வியடைந்துள்ள நிலையில், கல்வித் துறையை மேலும் சீரழிக்கும் நட வடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
உத்தரபிரதேச அரசு இணைப்பு என்ற பெயரில் சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது. ஆசிரியர் அமைப்புகளின் கூற்றுப்படி, அரசாங்கம் சுமார் 27,000 பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் கல்வியை அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பள்ளிகள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தால், சிறு குழந்தைகள், குறிப்பாக பெண்கள், பள்ளியை அடைய பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வது எப்படி? வெளிப்படையாக, அவர்களின் படிப்பு தவறவிடப்படும். இந்த உரிமை ஏன் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகிறது?
பாஜக அரசின் இந்த உத்தரவு கல்வி உரிமைக்கு எதிரானது மட்டுமல்லாமல், தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் எதிரானது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!! appeared first on Dinakaran.