முசாபர்நகர்
உத்தர பிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் அமீர் (வயது 18). அவருடைய நண்பரான சுகைல் (19) உடன் மோட்டார் சைக்கிளில் ஷாபூரில் இருந்து புதானாவிற்கு நேற்று இரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. இதில் அமீர் மற்றும் சுகைல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து ஷாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத அந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.