
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனையும் குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தண்டனை விவரம் பின்வருமாறு:-
- 329 - மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் - 3 ஆண்டுகள் சிறை
- 126(2) - மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - ஒரு மாதம் சிறை.
- 87 - வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் - 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.
- 127 (2) - உடலில் காயத்தை ஏற்படுத்துதல் - 1 ஆண்டு சிறை.
- 75(2) - விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் - 3 ஆண்டுகள்
- 76 - கடுமையாக தாக்குதல் - 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
- 64 (I) பாலியல் வன்கொடுமை -30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள்; ரூ.25,000 அபராதம்.
- 351 (3) கொலை மிரட்டல் விடுத்தல் -7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
- 238 (B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
- 66 (E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்.
- சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.