உ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது; துப்பாக்கி பறிமுதல்

4 weeks ago 5

லக்னோ,

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். பாஜக மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைதளம் மூலம் நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், உ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். நோய்டாவில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஷேக் அதுல் என்பதும் அவர் பல ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தின் மெல்டா பகுதியில் வசித்து வந்தார் என்பது தெரியவந்தது. வங்காளதேசத்தை சேர்ந்த ஷேக் அதுல் பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்து மேற்கு வங்காளத்தில் வசித்து வந்துள்ளார் என தெரியவந்தது.

மேற்கு வங்காளத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரபிரதேசம் வந்துள்ளார். அதேவேளை கைது செய்யப்பட்ட ஷேக் அதுலிடமிருந்து கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Read Entire Article