
காஸ்கஞ்ச்,
உத்தர பிரதேசத்தில் கங்கையில் புனித நீராட சென்று விட்டு சிலர் சொந்த ஊருக்கு டிராக்டரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட கஞ்ச்துந்த்வாரா பகுதியில் வந்தபோது, அந்த டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணித்தவர்களில் 34 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் குமார் பாரதி கூறும்போது, கங்கையில் புனித நீராடி விட்டு டிராக்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லவில்லை என்றார். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.