உ.பி.: நவம்பர் 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து; அரசு அறிவிப்பு

3 months ago 23

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பண்டிகை கால கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. துர்கா பூஜை, தசரா, தீபாவளி மற்றும் சத் பூஜா ஆகியவை அடுத்தடுத்து வர இருக்கின்றன. இந்நிலையில், டி.ஜி.பி. பிரசாந்த் குமார் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை ஒன்றில், அக்டோபர் 8-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் தூய்மை செய்யும் பணி தொடர்ந்து வருகிறது. ஆற்றில் அதிக அளவில் மண் சேர்ந்து நீர்மட்டம் பெருமளவில் குறைந்து போய் விட்டது. அதனால், பண்டிகைக்கு முன் துரிதகதியில் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Entire Article