லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் தகுர்வாடா கிராமத்தை சேர்ந்த 16 வயதான தலித் சிறுமி இன்று காலை தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த ரஷித் என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்றார்.
பின்னர், சிறுமியை காரில் வைத்து ரஷித் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர செயலை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். சிறுமி கடத்தப்பட்டபோது அவரது வீட்டில் யாரும் இல்லை. தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட சிறுமி சாலையோரம் காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய ரஷிதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.