உ.பி.: சாலை விபத்தில் 5 பேர் பலி

6 months ago 26

படாவன்,

உத்தர பிரதேசத்தின் டெல்லி-படாவன் நெடுஞ்சாலையில் முஜாரியா பகுதியில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றும், லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று விபத்தில் சிக்கின.

இதில் 5 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், காவல் துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், உத்தர பிரதேசத்தின் பரேலி நகரை சேர்ந்தவர் ஆவர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article