ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி: 7,000 போலீஸ் பாதுகாப்பு

2 months ago 6

கோவை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை கோவை வருகையையொட்டி 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா நாளை (26ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த விழாவில், முக்கிய விருந்தினராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (25ம் தேதி) மாலை அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்து இரவில் கோவை தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை பீளமேட்டில் பாஜ மாவட்ட புதிய அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார். பின்னர் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகலில் கோவை ஈஷா மையம் புறப்பட்டு செல்லும் அவர் நாளை இரவே கோவை விமான நிலையம் திரும்பி டெல்லி செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் கல்விக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக அரசியல் கட்சியினர், மாணவர்கள், முற்போக்கு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
கோவை மாநகரில் 3 ஆயிரம் மற்றும் புறநகரில் 4 ஆயிரம் என மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

The post ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி: 7,000 போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article