![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/31/36728633-chennai-08.webp)
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, ஈரோட்டில் இருந்து வருகிற (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சம்பல்பூர் செல்லும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்-08312) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
அதேபோல, சம்பல்பூரில் இருந்து வருகிற 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஈரோடு வரும் சிறப்பு ரெயிலிலும் (08311) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.